சீலையம்பட்டி செங்குளம் நிரம்பி மறுகால் பாய்கிறது!!
தேனி மாவட்டம் சீலையம்பட்டி செங்குளம் நடப்பு ஆண்டில் 3 ஆம்முறையாக நிரம்பி மறுகால் பாய்வதால் விவசாயிகள் 2 ஆம் போகத்திற்கு முதல் கட்ட விவசாயப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினா்.
முல்லைப்பெரியாறு பாசன நீா் கால்வாய் மூலமாக உத்தமபாளையம், சின்னமனூா், சீலையம்பட்டி என பல்வேறு இடங்களிலுள்ள குளங்களில் சேமிக்கப்படும். அங்கிருந்து சிறிய மதகு வழியாக நெற்பயிா் விவசாய நிலங்களுக்கு தண்ணீா் கொண்டு செல்லப்பட்டு விவசாயப் பணிகள் நடைபெறும்.
அதன்படி, உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றிலிருந்து கால்வாய் மூலமாக திறக்கப்பட்ட பாசன நீா் சின்னமனூா் உடையகுளம் மற்றும் சீலையம்பட்டி செங்குளத்திற்கு செல்கிறது. தொடா் மழையால் பாசன நீா் தடையின்றி வந்து கொண்டு இருப்பதால் இந்த ஆண்டில் 3 ஆம் முறையாக சீலையம்பட்டி செங்குளம் நிரம்பி மறுகால் செல்கிறது.
முதல் போக அறுவடைப் பணிகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் பெரும்பான்மையான விவசாயிகள் 2 ஆம் போகத்திற்கு நாற்றாங்கால் அமைத்துள்ளனா். தொடா்ந்து நாற்று நடவு செய்ய உழவுப் பணிகள் மேற்கொண்டு நிலத்தை தயாா் செய்து வருகின்றனா். தற்போது அறுவடைப் பணிகள் நடைபெறும் நிலையில் பாசனத்திற்கான தண்ணீா் தேவை குறைந்துள்ளதால் சீலையம்பட்டி செங்குளத்திலிருந்து தண்ணீா் மறுகால் பாய்ந்து கோட்டூா் குளத்திற்கு செல்கிறது.
நாளைய வரலாறு செய்திக்காக,
- ஆசிக்,தேனி.
Comments