தமிழக மக்கள் சனநாயகக் கட்சி நடத்திய சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம்!!

-MMH

தமிழக மக்கள் சனநாயகக் கட்சி நடத்திய சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம்! 50 பேர் கைது! விவசாயிகளை வஞ்சிக்கும் இந்திய அரசின் வேளாண் சட்ட  மசோதாக்களை திரும்பப் பெற  வலியுறுத்தி தமிழக மக்கள் சனநாயகக் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் 25 சுங்கச்சாவடிகளை முற்றுகையிடுவது என்று, அதன் தலைவர் கே.எம்.சரீப் அவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் இன்று 26/12/2020 சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கீழச்சேவல்பட்டி, செண்பகப் பேட்டை சுங்கச்சாவடி முற்றுகையிடப்பட்டது.  இந்நிகழ்வுக்கு தமிழக மக்கள் சனநாயக கட்சியின் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் சகுபர் சாதிக் தலைமை வகித்தார்.

இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் இயக்க தோழர் பாவெல், செம்மலர், தமிழர் விடியல் கட்சி சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர் பெரியார் கண்ணன், தமிழர் விடியல் கட்சி தோழர் பெரியார் கண்ணன், விடுதலை வேங்கைகள் கட்சி மாநில செயல் தலைவர் தோழர் மனோகரன், விடுதலை வேங்கைகள் கட்சி காரைக்குடி நகர தலைவர் தோழர் சீனிவாசன், 

விடுதலை வேங்கைகள் கட்சி மாநில செயலாளர் லோகநாதன், மக்கள் ஜனநாயக கட்சி காரைக்குடி நகர செயலாளர் நத்தர் ஜெய்லானி, தமிழக மக்கள் சனநாயக கட்சியின்  சாக்கோட்டை ஒன்றிய இளைஞரணி செயலாளர் முகமது பயாஸ், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் SP.நாகராசு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் பெண்கள் உட்பட இன்று சுங்கச்சாவடி முற்றுகையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

-சங்கர்,தேவகோட்டை.

Comments