கோவில்களில் மார்கழி சிறப்பு பூஜைகள்!!

-MMH

பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில் உள்ள கோவில்களில் மார்கழி ஒன்றாம் தேதியை முன்னிட்டு அதிகாலை முதலே  சிறப்பு பூஜைகள் நடைபெற்றன மேலும் மாதங்களில் மிகவும் உயர்ந்தது மார்கழி என்பார்கள் மார்கழி மாதத்தை தேவர்களின் மாதம் என்று சொல்கிறார்கள்.

அத்தனை சிறப்புகள் வாய்ந்த இந்த மார்கழி மாதத்தில் பெண்கள் அதிகாலை எழுந்து வாசலில்  கோலம் இட்டு அதில் சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து கோலத்தை பூக்களால் அலங்கரித்து மார்கழியை வரவேற்கிறார்கள்  என்பது குறிப்பிடத்தக்கது. 

-M.சுரேஷ்குமார் கோவை தெற்கு.

Comments