பொள்ளாச்சியில் நடக்கவிருந்த வேளாண் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதிக்கான பயிலரங்கம்! M.P.வலியுறுத்தள்

-MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடக்கவிருந்த வேளாண் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதிக்கான பயிலரங்கம் தேதி அறிவிக்கப்படாமல் தள்ளிப்போனது. மத்திய தொழில் வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதிக்கான அமைப்பு சார்பில்  கடந்த மார்ச் மாதம் பொள்ளாச்சியில் தொழில்நுட்ப பயில அரங்கத்தை நடத்த திட்டமிட்டிருந்தது ஆனால் நோய்த் தொற்று பரவல் காரணமாக பயிலரங்கம் தள்ளிப்போனது இப்பொழுது இயல்பு நிலை திரும்பி உள்ள நிலையில் பயில அரங்கத்தை எப்போது நடத்தப்படும் என்று அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை இந்நிலையில் அறிவிக்கப்பட்ட பயில அரங்கத்தை வரும் ஜனவரி மாதம் நடத்தப்பட வேண்டும் டெல்லியில் உள்ள ஏ.பி.இ.டி.ஏ அமைப்பின் தலைவர் அங்க முத்துவுக்கு பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

-M.சுரேஷ்குமார்கோவை தெற்கு

Comments