ஜெயலலிதாவின் நினைவிடம் 27 ஆம் தேதி திறப்பு..!

     -MMH

சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை வரும் 27 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திகுறிப்பில், 27 ஆம் தேதி புதன்கிழமை காலை 11 மணியளவில் முதலமைச்சர் தலைமையேற்று நினைவிடத்தை திறந்து வைக்க இருப்பதாகவும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிப்பார் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் சபாநாயகர், அமைச்சர்கள், எம்பி., எம்எல்ஏக்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

நாளைய வரலாறு செய்திகக்காக,

-V.ருக்மாங்கதன்,சென்னை.

Comments