மகிழ்ச்சியுடன் புத்தாண்டை வரவேற்ற போத்தனூர் மக்கள்..!!


     -MMH 

கோவை மாவட்டம் போத்தனூர் ஸ்ரீராம் நகர் அன்பு நகர் பகுதியில் அமைந்துள்ள பூங்காவில் நேற்று புத்தாண்டை வரவேற்கும் விதமாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், கோவை மாவட்டம் போத்தனூர் பகுதி கழக செயலாளர் A ரபீக் அவர்கள் தலைமையில் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் T.சுறா மற்றும் 99 வது டிவிசன் தலைவர் குச்சி பாலன், எம் மயில்சாமி, மற்றும் சுரேஷ் பாபு, கண்ணன்,திருமலை கே எஸ் மோகன், பன்னீர், அனந்த பத்மநாபன், சாவித்ரி,பத்மா,சாந்தி,செந்தில்,இப்ராஹிம் மற்றும் கழகத் தொண்டர்களும் அந்தப் பகுதி வாழ் பொதுமக்களும்  கலந்து கொண்டு  அனைவரும் மகிழ்ச்சியுடன் கேக் வெட்டி புத்தாண்டை மனதார வரவேற்று மகிழ்ந்தனர்.

-ஈஷா,கோவை.

Comments