சிங்கம்புணரியில் தங்கை முறையுள்ள சிறுமியை கர்ப்பமாக்கிய காமுகன்!!

      -MMH

சிங்கம்புணரியில் தங்கை முறையுள்ள சிறுமியை கர்ப்பமாக்கிய காமுகன்!போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து டிரைவருக்கு வலைவீச்சு!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த 16 வயது மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

அந்த மாணவிக்கு உறவு முறையில் அணணனான 23 வயதான டிரைவர் அஜித் குமார் என்பவர், அடிக்கடி சிறுமியின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.

அண்ணன் தங்கை என்பதால் அவர்கள் பழகுவதை சிறுமியின் பெற்றோர் தவறாகக் கருதவில்லை. 

இந்த நிலையில் டிரைவர் அஜித் குமார் மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிகிறது.

இதில் அந்த மாணவி கர்ப்பம் ஆகியுள்ளார். இந்த நிலையில் மாணவியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதை அறிந்த அவரது தாயார் அவரை மருத்துவமனையில் பரிசோதித்தபோது, சிறுமி 6 மாத கர்ப்பம் என்று தெரியவந்ததால் தாயார் அதிர்ச்சி அடைந்தார்.

தன்னை அண்ணனே கர்ப்பமாக்கியதாக அந்த மாணவி கண்ணீருடன் கூறினார்.

இதையடுத்து மாணவியின் பெற்றோர் சிங்கம்புணரி காவல்துறையில் புகார் செய்ததையடுத்து போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர் அஜித் குமாரை காவல்துறையினர் வலைவீசித் தேடிவருகின்றனர்.

- அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments