குளிர்பானங்கள் அதிகவிலை வைத்து விற்கும் சிறு கடைகள்!! - கண்டுகொள்ளாத மாநகராட்சி...!!
நாகப்பட்டினம் வேளாங்கண்ணி சர்ச் அருகில் இருக்கக்கூடிய கடை ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் குளிர்பானம் வாங்குவதற்காக சென்று இருந்தார் அப்போது குளிர்பானத்தின் விலை நிர்ணயத்துக்கு
மேல் பத்து ரூபாய் அதிகப்படியாக கடைக்காரர்கள் வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.
மன உளைச்சல் ஆளான வாடிக்கையாளர் ஏன் இப்படி நிர்ணயத்துக்கு மேல் பத்து ரூபாய் கேட்கிறார் என்று கேட்டிருக்கிறார். அதற்கு அலட்சியமாக பதில் அளித்த கடைக்காரர் வாடிக்கையாளரை பொருட்படுத்த வில்லை.
தினந்தோறும் பொதுமக்கள் சிறு கடைகளை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்இது போல் அதிக அளவில் விலையை வைத்து விற்பனை நடத்திவரும் கடைக்காரர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேட்டுக்கொள்கின்றனர்.
-ஈசா,ரைட் ரபிக்.
Comments