வேளச்சேரியா? வெள்ளச்சேரியா? ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!

      -MMH

சென்னை வேளச்சேரியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவுள்ள  வேளச்சேரி ஏரியை சூழ்ந்துள்ள கழிவுகளை அகற்றி, இந்த ஏரியையும் சேத்துப்பட்டு ஏரியையும் அழகுபடுத்தி, படகு போக்குவரத்துடன் கூடிய சுற்றுலாத்தலமாக மாற்றும் பணிகள் திமுகழக ஆட்சியில் தொடங்கப்பட்டது. சேத்துப்பட்டு ஏரி மட்டுமே பணிகள் முழுமையாக முடிக்கப்பட்ட நிலையில், வேளச்சேரி ஏரிக்கு வரும் கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு புதிய பாதைகள் அமைக்கப்பட்டது. அதற்கு பிறகு கடந்த பத்தாண்டுகளாக எந்த பணியும் நடைபெறாமல் உள்ளது.

2018ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி.பழனிச்சாமி அந்த ஏரியை சீரமைக்க 25 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தார். இரண்டு வருடங்கள் கழிந்தும் ஏரியை சீரமைக்கும் பணிகள் துவங்கப்படவில்லை. அதேபோல் திமுக ஆட்சியில் வீராங்கல் ஓடை சீரமைக்கும் பணிகள் இருபது சதவீதம் நிறைவுற்றது. நூறு கோடிக்கும் மேலான வீராங்கல் ஓடையை ஆழப்படுத்தி, இருபுறமும் கான்கிரீட் தடுப்புகள் கட்டும் திட்டம் கடந்த பத்தாண்டுகளில் ஒரு சில இடங்களில் மட்டுமே துவங்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக கடந்த பருவ மழைகாலத்தில் வேளச்சேரி மிகப்பெரிய வெள்ள பாதிப்புக்குள்ளானது. வாரக்கணக்கில் மழைநீர் தேங்கி மிகப்பெரிய பாதிப்பை ஏற்ப்படுத்தியது. எனவே, இதை கவனிக்காத அதிமுக அரசை கண்டித்து வருகின்ற 21ஆம் தேதி (நாளை) மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படவுள்ளது என திராவிட முன்னேற்ற கழக சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் திரு.மா.சுப்பிரமணியன் MLA தெரிவித்துள்ளார்.

-பாலாஜி தங்கமாரியப்பன்,சென்னை போரூர்.

Comments