லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி..!! - இன்ஸ்பெக்டர், ஏட்டு கைது!!

-MMH 

போதைப் பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் எட்டு ஜெயிலில் அடைப்பு. ஒரு  லட்சம்  வாங்கிய வழக்கில் ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் விஜயகுமார் இவருடைய மனைவி மகேஸ்வரி,விஜயகுமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கஞ்சா வியாபாரம் செய்து வந்தார். 

தற்போது திருந்தி 18 பேரை வைத்து கட்டிட தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சரோஜினி மற்றும் ஏட்டு ராமசாமி ஆகியோர் விஜயகுமாரை தினந்தோறும் அழைத்து ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுக்கும்படி கேட்டு உள்ளனர். 

நான் இப்பொழுது திருந்தி வாழ்ந்து கொண்டிருக்கிறேன். பணம் கொடுக்க முடியாது என அவர் கூறி உள்ளார். இல்லை என்றால் உன் மீது கஞ்சா கடத்தல் வழக்கு பதிவு செய்து மீண்டும் சிறையில் அடைப்போம் என மிரட்டி உள்ளனர். அதனால் மன உளைச்சல் ஏற்பட்டு அவர் பல இடங்களில் கடன் பெற்று முதல் தவணையாக 30,000 கொடுத்துள்ளார். 

பிறகு தன் மனைவியிடம் வந்து நகை அடகு வைத்து கொடு என்று கேட்டுள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த உறவினர் ஒருவர் இந்த தகவல் அறிந்ததும் லஞ்ச ஒழிப்பு போலீசில் இதுகுறித்து புகார் செய்யலாம் என கூறினார். இதனை தொடர்ந்து கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். 

உடனடியாக போலீசார் 70,000 ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்து அனுப்பினார். அப்போது மாறுவேடத்தில் இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், இன்ஸ்பெக்டர் சரோஜா மற்றும் ராமசாமியை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு சென்று சோதனை நடத்தினர். 

இந்த சோதனையில் அங்கு இருந்த கணக்கில் வராத ரூபாய் 67 ஆயிரத்து 100 பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சரோஜினி ஏட்டு ராமசாமி ஆகியோரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாணையில் 2 பேரும் ஏற்கனவே விஜயகுமாரை மிரட்டி 3 முறை பணத்தை வாங்கியது தெரியவந்தது. 

விசாரணை முடிந்ததும் லஞ்ச ஒழிப்பு போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக இன்று காலை 2 பேரையும் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு 2 பேருக்கும் கொரோனா உள்ளிட்ட பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிந்ததும் இன்ஸ்பெக்டர் சரோஜினி ஏட்டு ராமசாமி ஆகியோரை லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சோஸ்திர மேரி முன்பு ஆஜர்படுத்தினர். 

வழக்கை விசாரித்த நீதிபதி இன்ஸ்பெக்டர் சரோஜினி கோவை மத்திய சிறையில் 15 நாட்கள் அடைக்க உத்தரவிட்டார். ஏட்டு ராமசாமியை பொள்ளாச்சி சப் ஜெயிலில் 15 நாட்கள் அடைக்க உத்தரவிட்டார். இதனை அடுத்து 2 பேரையும் பாதுகாப்புடன் போலீசார் சிறைக்கு அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர்.

-சீனி போத்தனூர்.

Comments