பொள்ளாச்சி அப்பாவி பெண்களை சீரழித்த கொடூரனுக்கு முக்கிய பகுதி பாதிப்பு..! மருத்துவமனையில் அனுமதி..!!

-MMH

சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான முக்கிய குற்றவாளிக்கு, உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பொள்ளாச்சியில் ஏராளமான இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதிஷ், மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்கள் 5 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அந்த சட்டம் ரத்து செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரும், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று, திருநாவுக்கரசுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன், அவனை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்ததில், அவனது பிறப்புறுப்பில் வீக்கம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.   

-நம்ம ஒற்றன். 

Comments