கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல்!!

     -MMH

     கேரளாவில் ஆலப்புழா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான வாத்துகள் மர்மமான முறையில் இறந்தன. இதை அறிந்த சுகாதாரத்துறை  இறந்து கிடந்த சில வாத்துகளை பரிசோதனை செய்ததில் பறவைக் காய்ச்சலை உண்டாக்கும் 'எச் 5 என் 8' வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது இதனையடுத்து பறவைக்காய்ச்சல் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் பறவைக் காய்ச்சல் மேலும் பரவுவதை தடுக்க இதுவரை 12 ஆயிரம் வாத்துகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் 36 ஆயிரம் வாத்துகளை கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது 

இந்நிலையில் பறவைக் காய்ச்சல் தமிழகத்திற்கு வருவதை தடுக்க கேரளாவில் இருந்து கோழிகள், வாழ்த்துக்கள், வாத்துக்களின் முட்டை, இறைச்சி உள்ளிட்டவைகளை  கொண்டு வர தமிழக  கால்நடைத் துறை தடை விதித்துள்ளது.   

இது குறித்து, கேரளா அமைச்சர் கே.ராஜு கூறுகையில்: "பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள பண்ணைகளிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வாத்துகள் மற்றும்  கோழிகள், முட்டைகள்  உள்ளிட்டவைகளை  அழிக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும்  அப்பகுதியிலிருந்து இறைச்சி,முட்டை ஆகியவைகளை வெளிச்சந்தையில் கொண்டுவந்து விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கிட்டத்தட்ட 36 ஆயிரம் வாழ்த்துக்கள் மற்றும் கோழிகள் அளிக்கப்பட வேண்டிய நிலை தற்போது உள்ளது. இதனால் உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் இழப்பை சரி செய்ய  இழப்பீடு வழங்கப்படும்  இந்த வைரஸ் மனிதர்களுக்கும் பரவ வாய்ப்பு இருப்பதால் வாத்துக்களை அழிக்கும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு கவச உடை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆலப்புழா கோட்டயம் மாவட்டங்களில் சில இடங்களில்தான் பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. அதை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது." என்று  தெரிவித்துள்ளார்.

-M.சுரேஷ்குமார், கோவை தெற்கு.

Comments