டெல்டா மாவட்டங்களில் வரலாறு காணாத மழை விவசாய பயிர்கள் கடும் பாதிப்பு.!!

 

-MMH

     தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கினாலும் ஜனவரி மாதத்திலும் பெய்து வருகிறது. வழக்கமாக டிசம்பர் மாத இறுதிலேயே பருவமழை முடிந்து விடும். ஆனால் தற்போது ஜனவரி மாதத்திலும் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. 

கடந்த மூன்று நாட்களாக இடைவெளியே இல்லாமல் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.  கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில்  விடிய, விடிய மழை பெய்து கொண்டே இருந்தது.


 நேற்று பகலிலும் விட்டு, விட்டு மழை பெய்து கொண்டே வருகிறது. இரவு முழுவதும்  மழை நீடித்தது. இந்த மழையின் காரணமாக தஞ்சை மாவட்டம் முழுவதும் மழை நீர் தாழ்வான இடங்களில் தேங்கியுள்ளது. இந்த மழை காரணமாக கடைவீதிகள், முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மக்கள் நடமாட்டமும் குறைந்து காணப்பட்டது. 

இன்னும் சில நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த, நெற்பயிர்கள் சாய்ந்து கிடப்பது விவசாயிகளுக்கு அதிர்ச்சி தரக்கூடியதாக உள்ளது. பல இடங்களில்  நெல்மணிகள் முளைத்துக் கிடக்கின்றன.

பொங்கலுக்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் சூழ்நிலையில்  கரும்பு அறுவடையும் அதன் விற்பனையும் மந்தமாகவே உள்ளது . 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு பின்வருமாறு.,


  மில்லி மீட்டரில் அய்யம்பேட்டை 27, கும்பகோணம் 26, பட்டுக்கோட்டை 24, மஞ்சளாறு 23, திருவிடைமருதூர் 17,  குருங்குளம் 15, தஞ்சை 15, வல்லம் 13, திருவையாறு 12, பூதலூர் 11, மதுக்கூர் 10 ஒரத்தநாடு 10, வெட்டிக்காடு 10, திருக்காட்டுப்பள்ளி 9, அதிராம்பட்டினம் 9, பேராவூரணி 7, கல்லணை 6, அணைக்கரை 6. 

நாளைய வரலாறு செய்திக்காக,  

-V.ராஜசேகரன்,தஞ்சாவூர்.


Comments