செல்போனுக்கு பதில் பவர் பேங்க்! உஷார் மக்களே!

 

-MMH

பொருளைப் பெற்றுக் கொண்டு தபால்காரரிடம் பணம் தந்தால் போதும் எனக் கூறி, பவா் பேங்க் அனுப்பி மோசடி! ஆன்லைன் ஷாப்பிங்கைப் பயன்படுத்தி ஏராளமான மோசடிகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், புதிதாக ஒரு மோசடி தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஆன்லைன் ஷாப்பிங் என்னும் மனநோய் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. தேவையற்ற பொருள் என்றபோதும், ஆன்லைனில் மீண்டும் மீண்டும் ஆர்டர் செய்வதைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். குறிப்பாக குடும்பப் பெண்களை குறிவைத்து இந்த ஆன்லைன் வியாபாரம் நடைபெற்று வருகிறது.

செல்போனுக்கு பதில் பவர் பேங்க்! இதன்விளைவாக, தரமற்ற பொருட்களை போலி படங்கள் மூலம் ஏமாற்றி விற்பது ஏமாற்றுபவர்களுக்கு எளிதாக உள்ளது. இதனைப் பயன்படுத்தியே தற்போது இந்த நூதன மோசடி அரங்கேறியுள்ளது. ₹.1750-க்கு ஒரு செல்போன் என்று விளம்பரம் செய்துள்ளனர். அதை நம்பி ஆர்டர் செய்தவர்களுக்கு பார்சல் வந்த போது பவா் பேங்க் இருந்துள்ளது. அதுவும் தரமற்ற, 200ரூபாய் முதல் 300 ரூபாய்க்கு கிடைக்ககூடிய ஒரு போலி பவர் பேங்க். 

இது தொடர்பாக, மக்கள் கவனமாக இருக்க நெல்லை மாநகர காவல் துணை ஆணையா் சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளாா். திருநெல்வேலி பகுதி மக்களை தொலைபேசியில் தொடா்பு கொள்ளும் மா்ம நபா்கள், கரோனா காரணமாக தங்கள் நிறுவன செல்லிடப்பேசிகளை ₹.1,750-க்கு நேரடி விற்பனை செய்வதாகவும், தபால்காரரிடம் பொருளை பெற்றுக் கொண்டு பணம் அளித்தால் போதும் எனக் கூறி பவா் பேங்க் அனுப்பி மோசடி செய்வது அதிகரித்துள்ளது. மேற்கண்ட மோசடி நபா்களிடம் மாநகர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றாா். மக்கள் அனைவருக்குமான, அக்கறை கலந்த எச்சரிக்கையாகவே இதை எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-பாரூக்.

Comments