புதிய வாக்காளர்களிடம் அலுவலர்கள் ஆய்வு!

 

-MMH

திருப்பத்துார் அருகே புதிய வாக்காளர்களிடம் பார்வையாளர் ஆபிரகாம் கள ஆய்வு. திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் புதிய வாக்காளர்களிடம் புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், சமூக நலத்துறை ஆணையாளருமான டி.ஆபிரகாம் நேரில் பார்வையிட்டு கள ஆய்வினை மேற்கொண்டார்.

இவர் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி, வாக்குச்சாவடி எண் 185, திருப்பத்தூர் வட்டத்தில், வாக்காளர் பட்டியல் சுருக்க முறைத் திருத்தம் சிறப்பு முகாம்களில், பெறப்பட்ட படிவங்கள் மற்றும் வாக்கு சாவடியில் பெறப்பட்ட படிவங்களில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்காளர்களின் முகவரி, வயது மற்றும் விண்ணப்ப நிலை குறித்தும், இது தொடர்பாக குறுந்தகவல் அலைபேசிக்கு வந்தது குறித்தும் நேரில் பார்வையிட்டு களவிசாரணை ஆய்வு மேற்கொண்டார். 

திருக்களாப்பட்டி, தெக்கூர், வஞ்சினிப்பட்டி, காவனுார் கிராமங்களுக்கு சென்று புதிய வாக்காளர்களிடம் நேரடி விசாரணை செய்தார். மேலும் புதிய வாக்காளர்கள் குறித்த விபரங்களையும் அவர்களது வீடுகளிலும், அருகில் உள்ள வீடுகளிலும் விசாரித்தார்.

இந்த ஆய்வின்போது தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் சுரேந்திரன், திருப்பத்தூர் வட்டாட்சியர் ஜெயலெட்சுமி, துணை வட்டாச்சியர் தேர்தல் மற்றும் வருவாய் ஆய்வாளர், வாக்குச்சாவடி அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், பார்வையாளரின் தொடர்பு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தார்.

-அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments