சிங்கம்புணரியில் பாதயாத்திரை பக்தர்கள் மீது கார் மோதி விபத்து!! இருவர் படுகாயம்!!


 -MMH

பல்வேறு பகுதிகளிலிருந்து பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு சிங்கம்புணரி ஒரு முக்கிய சந்திப்பாக இருக்கிறது. சிங்கம்புணரியில் சாலைகளின் இருபுறமும் இருசக்கர வாகனங்களை வைத்தும் பேனர்களை வைத்தும் நடைபாதை ஆக்கிரமிக்கப்படுவதால் பாதசாரிகள் வேறுவழியின்றி சாலையில் செல்வதால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன.

இன்று காலை  திண்டுக்கல் சாலையில், பழனி பாதயாத்திரை பக்தர்கள் மீது கார் ஒன்று மோதியதில், சூரக்குடியைச்  சக்திவேல் (60), குன்றக்குடியைச் சேர்ந்த பாரதி வயது (40) இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். ஆம்புலன்ஸ் வரத் தாமதமானதால்,  சிங்கம்புணரி போக்குவரத்து காவல்ஆய்வாளர் மனோகரன் ஆட்டோவை வரவழைத்து சிங்கம்புணரி தாலுகா அரசு மருத்துவமனைக்கு அணுப்பிவைத்தார்.

விபத்தின் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் பாதிக்கப்பட்ட போக்குவரத்தை காவலர்கள் சீர்செய்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து பற்றி சிங்கம்புணரி போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments