கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் கவிழ்ந்து விபத்து!! ஒருவர் சம்பவ இடத்திலே பலி!!

 -MMH

அரளிக்கோட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் கவிழ்ந்து விபத்து.ஒருவர் சம்பவ இடத்திலே பலி. 10பேர் காயம். ராமநாதபுரம் கீழக்கரை கணிமாங்குண்டை சேர்ந்த 16பேர் ஆன்மீகப் பயணமாக மினி வேனில் பழனிக்கு பயணப்பட்டிருக்கிறார்கள்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகா அரளிக்கோட்டை அருகே அவர்கள் வந்த மினி வேன் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மணி என்பவரின் மனைவி ஆறுமுகம்(65) என்ற பெண்மணி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மேலும் 10 பேர் காயத்துடன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அணுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து திருக்கோஷ்டியூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து பற்றி தகவல் அறிந்த அமமுக தலைமை நிலையச் செயலாளர் கே.கே.உமாதேவன் முன்னாள் எம்எல்ஏ விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். அதே இடத்தில் அடிக்கடி விபத்து நடப்பதால் அந்தப் பகுதியில் விரைவில் வேகத்தடை அமைக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட  அதிகாரிகளிடம் KK உமாதேவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

- அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments