சர்க்கரை நோயாளிகள் கரும்பு ஜூஸ் குடிக்கலாமா!!


 -MMH

கரும்பு வார்த்தையை உச்சரிக்கும் போதே நாவில் உமிழ்நீர் சுரக்கும். ஒரு டம்ளர் கரும்புச்சாறு ஆரோக்கியத்தை அள்ளித்தரும். தெருவோர கடைகள் முதல் நட்சத்திர ஹோட்டல் வரை பிரதானமானது. தாகம் தணிக்கவும், உடனடி ஆற்றல் பெறவும் எடுத்துகொள்ளும் இந்த சாறு உடலுக்கு தரும் நன்மைகள் ஏராளம். இனிப்பு நிறைந்த பொருள்கள் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் என்றால் அதில் கரும்பும் ஓன்று. உடலுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்துக்களால் இது நிரப்பப்படுகிறது.

குறைந்த விலையில் எளிதாக கிடைக்கும் கரும்புச்சாறுடன் இலேசான புளிப்புத்தன்மை கொண்ட எலுமிச்சைச்சாறும், வைட்டமின் சி நிறைந்த புதினா, மற்றும் இஞ்சியும் சேரும் போது அது சுவைக்கூட்டும் ஆற்றல் மிக்க அமிர்த பானமாக இருக்கும். ஒரு டம்ளர் கரும்புச்சாறு உடலுக்கு தரும் நன்மைகள் குறித்து தெரிந்துகொள்வோம். இதன் ஊட்டச்சத்து அடர்த்தி அளவிடமுடியாதது. இதில் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, மாங்கனீசு, பல்வேறு அமினோ அமிலங்கள், துத்தநாகம், தயாமின் மற்றும் ரைஃபோப்ளேவின் போன்றவை அடங்கியுள்ளது. 8 அவுன்ஸ் கொண்ட கரும்பு சாற்றில்180 கலோரிகளும், 30 கிராம் சர்க்கரையும் உள்ளது. இந்த சாறு நார்ச்சத்து கொண்டதும் கூட. இதில் உள்ள ஃப்ளவனாய்டுகள் மற்றும் பாலிபினோலிக் கலவைகள் ஆக்ஸிஜனேற்றிகளை வழங்க கூடியது. இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.

கரும்புச்சாறு இனிப்பான பானம். இது பதப்படுத்தப்பட்ட சர்க்கரை மற்றும் உயர் ப்ரக்டோஸ் சோளம் சிரப் நிரப்பிய பானங்கள் போல் அல்ல இயற்கையாகவே சர்க்கரைகள் வழங்கப்படுவதால் இது குடித்த பிறகு அந்த நாள் முழுக்க வலுவாக வைத்திருக்க செய்கிறது. உடல் குளுக்கோஸ் வெளியீட்டை கட்டுப்படுத்தும் அளவு திடமான ஆற்றலை வழங்கும். உடல் சோர்வை தடுக்க உதவும் பானங்களில் இவை முக்கியமானது. கரும்பில் இருக்கும் சுக்ரோஸ் ஆனது உடலுக்கு சரியான நேரத்தில் ஆற்றலை வழங்குகிறது. உடலை மறுசீரமைக்கவும், சோர்வை மீட்டெடுக்கவும் இது சிறந்த தேர்வாகவும்.

கரும்புச்சாறு உடலில் கால்சியம், இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் மாங்கனீசு அளவை அதிகரிக்க செய்கிறது. இது எலும்புகளை வலுப்படுத்த உதவும் ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. இது எலும்புக்கு உறுதி அளிக்கிறது. மிக முக்கியமாக எலும்பு தேய்மானத்தை உண்டு செய்யும் ஆஸ்டியோபொராசிஸ் அபாயத்தை தடுக்க செய்கிறது. குறிப்பாக பெண்களுக்கு தினமும் ஒரு டம்ளர் கரும்பு ஜூஸ் குடிப்பதன் மூலம் வயதானபிறகும் எலும்புகளை வலுவாக வைத்திருக்க செய்யும்.

செரிமான அமைப்பை பராமரிக்கவும் சீராக்கவும் செய்கிறது. கரும்புச்சாறு பொட்டாசியம் கொண்டிருப்பதால் வயிற்று கோளாறுகளை தடுக்க செய்கிறது. இது நார்ச்சத்தும் கொண்டிருப்பதால் வயிற்றில் குடல் அழற்சியை தடுக்கவும், குணப்படுத்தவும் செய்கிறது.

நாளைய வரலாறு  செய்திக்காக,

-ராயல் ஹமீது.

Comments