சிங்கம்புணரியில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா! நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு!
முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 104வது பிறந்த நாளை முன்னிட்டு பேருந்து நிலையம் முன்பு அதிமுகவினர் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
சிங்கம்புணரி வடக்கு ஒன்றிய, நகர அதிமுக சார்பாக நான்கு முனை சந்திப்பிலிருந்து ஊர்வலமாக வந்து, பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.
ஊர்வலத்திற்கு ஒன்றிய செயலாளர் சொ.வாசு தலைமை வகித்தார். இந்த நிகழ்வில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் திருவாசகம், துணைச்செயலாளர் சசிகுமார், ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் பெரி.மைலன், பேரவை செயலாளர் ரவீந்திரன், பேரூர் கழக துணை செயலாளர் குணசேகரன், நகர அவைத்தலைவர் தவமணி, ஐடி.விங் நகரசெயலாளர் சேவுகமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர்கள் கக்கன் ராஜா, சதீஸ்குமார், பிரகலாதன், நித்யா, கூட்டுறவு சங்க தலைவர் முத்துக்குமார், முன்னாள் மாவட்ட பிரதிநிதி கணேசன்,
ஒன்றிய மகளிர் அணி பொறுப்பாளர் தவச்செல்வி, சாந்தி, இளமொழி, முனீஸ்வரி, தொழிலதிபர் புருஷோத்தமன், தேசிங்கு, பொறியாளர் கண்ணன், கிருங்காக்கோட்டை செழியன், நேரு, அசோகன், எஸ்வி.மங்களம் சீனிவாசன் மற்றும் புகழேந்தி மற்றும் வார்டு செயலாளர்கள், நகர பொறுப்பாளர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இரா.பாரதி சிறப்புரை ஆற்றினார்.
-பாரூக், சிவகங்கை.
Comments