அரசு மற்றும் தனியார் பேருந்து நடத்துனர் ஓட்டுனர்களுக்குள் வாக்கு வாதம்! - போக்குவரத்து பாதிப்பு!!

     -MMH

     புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியிலிருந்து மதுரை செல்லும் அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளாகி, அரசுப் பேருந்து பணிமனை எதிரே தனியார் பேருந்துகளை சாலையின் குறுக்கே நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

நேற்று இரவு 8 மணியளவில் அரசு பேருந்து முதலில் செல்ல வேண்டும் எனவும், அதனை தொடர்ந்து தனியார் பேருந்து செல்ல வேண்டும் எனவும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் அரசுப்பேருந்து சரியான நேரத்தில் எடுக்காததால், அரசுப் பேருந்தை கண்டித்து தனியார் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் பஸ்சை சாலையில் மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்பு அரசு பேருந்து பணிமனை மேலாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், சரியான நேரத்தை அனைத்துப் பேருந்துகளும் பின்பற்ற வேண்டும் என்று முடிவு செய்த பின்பு  கூட்டம் கலைந்து சென்றது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-M.சதாம் உசேன், பொன்னமராவதி.

Comments