நாம் தமிழர் கட்சியின் சார்பில் முப்பெரும் விழா!

     -MMH

     சிவகங்கை  மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக திருப்பத்தூர் ஒன்றியம் கொன்னத்தான்பட்டி மற்றும் பூலாம்பட்டி ஆகிய கிளைகளில் புலிக்கொடி ஏற்றம், மழலையருக்கான  விளையாட்டுப்போட்டி, மரக்கன்றுகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடந்தது.

இவ்விழாவிற்கு நாம் தமிழர் கட்சியின் சிவகங்கை வடக்கு மாவட்ட தலைவர் சீமான் குணா தலைமை தாங்க, திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி தலைவர் சுந்தர்ராஜ் முன்னிலை வகிக்க, இந்நிகழ்வில் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி செய்தி பிரிவு ரஞ்சித், பாக்கியராஜ், சிங்கம்புனரி ஒன்றிய செயலாளர் மோகன், இளைஞர் பாசறை பெரு செல்லத்துரை, மழலையர் பாசறை கௌதம், கௌசி, ரமேஷ், தமிழ்வேந்தன், இலக்கிய வேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த முப்பெரும் விழாவை பாரதிராஜா ஒருங்கிணைத்தார்.

- அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments