உணவை பிரஷர் குக்கரில் சமைத்து சாப்பிட்டால் மிகப்பெரிய ஆபத்து!! - மக்களே உஷார்!!

     -MMH 

     நம் அன்றாட வாழ்வில் சமைக்கும் உணவை பிரஷர் குக்கரில் சமைப்பதால் உடலுக்கு பல்வேறு தீங்குகள் ஏற்படுகின்றன.  

தற்போதைய அவசர காலகட்டத்தில் மனிதர்கள் அனைவரும் இயந்திரம் போல இயங்கி அனைத்து வேலைகளையும் விரைவாக செய்து முடிக்க நினைக்கிறார்கள். அதன்படி சாப்பிடும் உணவை விரைவாக சமைத்து முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பலரும் பிரஸர் குக்கர் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் அதனால் ஏற்படும் தீமைகளைப் பற்றி அவர்கள் அறிவதில்லை. பொதுவாக நாம் உணவை சமைக்கும்போது காற்று மற்றும் வெளிச்சம் அதில் பட வேண்டும் என பழங்காலத்தில் கூறுவது வழக்கம். ஆனால் தற்போது பிரஷர் குக்கரில் சமைக்கும் உணவில் காற்று புகாது வெளிச்சமும் படாது.

பிரஷர் குக்கரில் மொத்தமாக அடைக்கப்பட்ட உணவு சமைக்க படுவதால் உடலுக்கு பலம் குறைந்து பலவீனம் ஏற்படுகிறது. ஆங்கிலேயர்கள் காலத்தில் கைது செய்யப்படும் பலமிக்க குற்றவாளிகளுக்கு அலுமினிய பாத்திரத்தில் வைத்து பிரஷர் கொடுத்து சமைக்கப்படும் உணவை வழங்குவார்கள். அதற்கு காரணம் பிரஷர் கொடுத்து சமைக்கப்படும் உணவை சாப்பிடுவதால் அவர்கள் பலவீனமாகி விடுவார்கள். அவர்களின் இந்த பழக்கம் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. நமக்கு தேவையான உணவுப் பொருட்களை விளைவிப்பதற்கு ஆறுமாதம் காத்திருக்கும் நாம், அதனை சமைப்பதற்கு அரை மணி நேரம் கூட காத்திருப்பதில்லை.

அதனால் உணவுப் பொருட்களில் இருக்கும் இயற்கையான சத்துக்கள் பிரஷர் குக்கரில் இருந்து வெளிவரும் ஆவியாக சென்றுவிடுகிறது. எனவே பிரஷர் குக்கரை தவிர்த்து மண்பாண்டம், வெண்கலம், பித்தளை மற்றும் சில்வர் போன்ற பாத்திரங்களில் சமைப்பது 90 சதவீதம் முதல் 100% வரை சத்துக்கள் உணவில் அப்படியே இருக்கும். அதனால் மக்கள் அனைவரும் இனி பிரஷர் குக்கரில் சமைப்பது தவிர்த்துவிடுவது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

-ஸ்டார் வெங்கட்.

Comments