மதுபோதையில் வாகன ஓட்டிகள் செய்யும் அகால மரணங்கள்!

 -MMH 

    நமது கோவை மாவட்டத்தில் மக்கள் அதிகம் வாழும் பகுதியாக எல்லா இடங்களும் இருக்கின்றது. மக்கள் பல தொழில்கள் புரிந்து ஓரளவு நேர்மையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த தருணத்தில் பாமர மக்கள் மற்றும் வசதி உள்ளவர்கள் அனைவரும் இன்று தங்கள் உழைப்பினால்  தங்கள் குடும்பங்களை பாதுகாத்து வருகின்றனர். இந்த சமயத்தில் பெரியவர்கள் இருந்து சிறியவர்கள் வரை மிகவும் கவனத்துடன் வாகனங்களை பயன்படுத்தி நம்முடைய விலை மதிப்புள்ள உயிரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. வாகனம் ஓட்டுபவர்கள் தமக்கு குடும்பங்கள் இருக்கின்றன என்ற கவனத்துடனும் பொறுப்புடனும் இருக்க வேண்டும். 

கோவை மாவட்டம் சுந்தராபுரம் சிட்கோ பகுதியில் கனரக வாகனமான லாரி ஒன்று இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மேல்  மோதியதால் அந்த சம்பவ இடத்திலேயே அந்த நபர் இறந்துவிட்டார். சம்பவ இடத்திற்கு காவல்துறை சென்று விசாரணை செய்து வருகின்றது. கனரக வாகனத்தின் ஓட்டுநர் மதுபோதையில் இருந்திருக்கிறார். மாபெரும் தவறை செய்து அவர் ஒரு விபத்தை ஏற்படுத்தி விட்டார். இதனால் அந்த இறந்த நபரின் குடும்பம் என்ன நிலை ஆகும் என்று யாருக்கும் தெரியாது. வாகன ஓட்டிகள் யாராக இருந்தாலும் மது போதையில் இருக்கும் பொழுது வாகனத்தை ஓட்டாதீர்கள். வாகனம் ஓட்டும் பொழுது மது அருந்தாதீர். அரசாங்கமும் இதை சொல்லிக் கொண்டு வருகின்றது. நாமும் நேரடியாக இதுபோல சம்பவங்களை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

ஆகவே தயவுகூர்ந்து இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் யாராக இருந்தாலும் மிகவும் கவனத்துடனும் பொறுப்புடனும் வாகனங்களை இயக்க வேண்டும். இதுபோல மரண சம்பவங்களை நாம் தவிர்த்து நம் உயிரையும் மற்றவர்கள் உயிரையும் பேணிக்காப்போம்.மேலும் இது போன்ற சம்பவங்களை அரசாங்கம் கண்டுகொண்டு மதுபோதையில் வாகனம் இயக்குபவர்களுக்கு  மிகவும் தொகையான தண்டனையை கொடுத்து உயிர்களை காப்பாற்ற அரசாங்கம் மற்றும் ஆர்டிஓ போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கிரி, ஈஷா.

Comments