சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியானா செய்தி!! - வால்பாறை- சாலக்குடி பேருந்துகள் இன்று முதல் இயக்கம்!!
பொள்ளாச்சி வரும் சுற்றுலா பயணிகள் வால்பாறை செல்லாமல் ஊர் திரும்ப மாட்டார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த சுற்றுலாத்தலங்களில் வால்பாறையும் ஒன்று.
வால்பாறை வரும் சுற்றுலாப் பயணிகள் இவ்வளவு தூரம் வந்துட்டோம் அப்படியே சாலக்குடி அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை பார்த்துட்டு வந்துடலாம் என்ற எண்ணம் கண்டிப்பா தோன்றும் அளவுக்கு சுற்றுலாப் பயணிகளை கவரும் ஒரு இடம் தான் கேரளாவிலுள்ள சாலக்குடி நீர்வீழ்ச்சி.
ஆனால் சொந்த வாகனத்தில் வருவோருக்கு மட்டும்தான் அங்கு சென்று வர முடியும், ஏனென்றால் வால்பாறையில் இருந்து சாலக்குடிக்கு நேரடியாகப் பேருந்து வசதி இல்லை. சிலகாரணங்களால் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வால்பாறையில் இருந்து சாலக்குடி வரை இயங்கிவந்த தனியார் பேருந்துகள் இன்று முதல் அரசு அனுமதியுடன் மீண்டும் இயங்க உள்ளதால் பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
-M.சுரேஷ்குமார், கோவை தெற்கு.
Comments