பொருத்தப்பட்டது சிசிடிவி கேமரா கண்காணிப்பில் கரும்புக்கடை..!!


-MMH 

     கோவை மாவட்டம். கரும்புக்கடை பகுதியில் சுமார் 80 சிசிடிவி, கேமராக்களுக்கு மேல் பொலீஸ் கமிஷனர் சுமித் சரண் அவர்கள் துவங்கி வைத்தார். கோவையை சுற்றியுள்ள முக்கிய பகுதிகளில் குற்றச் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருவதாக காவல்துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

விபத்துகள், பெண்கள், மற்றும் குழந்தைகள், பாதுகாக்கும் விதமாக இதனை கருத்தில் கொண்டு கோவை மாநகரம் முழுவதும் இதுவரை சுமார் பத்தாயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

இதை கருத்தில் கொண்டு கரும்புக்கடை பகுதியில் கேமராக்கள் பொருத்தப்பட்டன இதனால் குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் மற்றும்  சமூக ஆர்வலர்களும் வரவேற்றனர்.

-ஈஷா கோவை.

Comments