கோவை வட்டாரப் போக்குவரத்து சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை..!

-MMH 

வட்டாரப் போக்குவரத்து சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை. 51.080 ரூபாய் பறிமுதல். இன்ஸ்பெக்டர் உட்பட ஓய்வுபெற்ற அதிகாரி மற்றும் 4 பேரிடம் விசாரணை. 

கோவை கேரளா எல்லையில் உள்ள வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவலின் அடிப்படையில் திடீர் ஆய்வு செய்தனர். அதில் கணக்கில் வராத 51 ஆயிரத்து 80 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அங்கு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர், ஓய்வுபெற்ற வட்டாரப் போக்குவரத்து அதிகாரி, ஒரு பெண் உட்பட 4 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 

கேரளாவில் இருந்து கோவை வரக்கூடிய முதல் சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி கணேஷ் பாண்டியன் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் கணக்கில் வராத, ரசீது போடப்படாத 51 ஆயிரத்து 80 ரூபாய் இருப்பது தெரிய வந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார் அங்கு பணியில் இருந்த மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் ராமலிங்கம், உதவியாளர் சீனிவாசன், இளநிலை உதவியாளர் பத்மா, ஓய்வுபெற்ற போக்குவரத்து அதிகாரி கோபாலகிருஷ்ணன் ஆகியோரை பிடித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அந்த சோதனை சாவடியில் தொடர்ந்து வாகனங்களிடம் லஞ்சம் பெறுவதாக போலீசாருக்கு தொலைபேசி மூலமாக ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து இந்த திடீர் சோதனையில் ஈடுபட்டதாக டி.எஸ்.பி கூறினார். அதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் போக்குவரத்து சோதனைச் சாவடிகளை குறிவைத்து சோதனை செய்து வருகின்றனர்.

சீனி போத்தனூர்.

Comments