ஆத்துப்பாலம் காளவாய் நிரம்பி நீர் வருவதால் மக்கள் மகிழ்ச்சி..!!

     -MMH 

     கோவை மாவட்டம் ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள தடுப்பணை நீர் நிரம்பி வழியும் காட்சி கோவை மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மாவட்டங்களுக்கு கன மழை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள நிலையில். நேற்று திடீரென்று மாலை மழை கொட்டத் தொடங்கியது இந்த மழை இரவு வரை நீடித்து கோவை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 

கோவையில் இருக்கக்கூடிய அனைத்து நீர் நிலைகளையும் சரி செய்து வந்த தமிழக அரசு தொலைநோக்கு திட்டம் ஆன நீர் வேளாண்மை திட்டத்தை மாண்புமிகு எஸ் பி வேலுமணி அவர்கள் துவங்கி வைத்த நிலையில் கோவை மக்களுக்கு இனி வரும் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை முற்றிலும் இருக்காது என்று கூறியுள்ளது.

-ஈஷா,கோவை .

Comments