வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம்!

-MMH

இந்தியாவின் முது கெலும்பான விவசாயிகளின் வாழ்க்கையைக் கேள்வி குறியாக்கும் வகையில் விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை மோடி தலைமையிலான ஆளும் பாஜக அரசு  கொண்டுவந்துள்ளது. இதை திரும்பப் பெற வலியுறுத்தி மதுரை மத்திய தொகுதி எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் கொட்டும் மழையில் நடைபெற்றது.

போராட்டத்திற்கு தொகுதிச் செயலாளர் அபுதாகிர் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது கலந்து கொண்டார். திருப்பரங்குன்றம் கிளை தலைவர் கலீல், செயலாளர் ஷகாவத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில், "மத்திய அரசே! விவசாயிகளை வாழ விடு! வேளாண் சட்டத்தை கைவிடு! போராடும் விவசாயிகளை நசுக்காதே! விவசாயிகளை கார்ப்பரேட்களிடம் விற்காதே! வேளாண் சட்டத்தை ரத்து செய்" என கோஷமிட்டனர்.

-ராயல் ஹமீது.

Comments