வாட்ஸ் அப்பைப் பாதுகாப்பாய்ப் பயன்படுத்துவது எப்படி..!

-MMH

ஒன்றல்ல.. இரண்டல்ல...700 மில்லியன் பயனர்களைக் கொண்டது வாட்ஸ் அப் மேசேஜிங் சர்வீஸ். இதில் அதிக பயன்கள் இருப்பினும், சில குறைபாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன.சிலர் ஆர்வக் கோளாறால் வாட்ஸ் அப்பில் சுய விபரங்களைப் பகிர்ந்து விடுகின்றனர். வாட்ஸ் அப் மூலம், பேங்க் அக்கவுண்ட் டீடெய்ல்ஸ், வீடியோ, புகைப்படங்கள், அலுவலக ரீதியான தகவல்கள் போன்றவைகள் அன்றாடம் பறிமாறப் படுகின்றன.

இதில் குறிப்பிடத்தக்க பிரைவசி இல்லாததால், மற்றவர்கள் உங்கள் சுய விபரங்களை தவறாக பயன்படுத்த கூடூம். இதைத்  தவிர்க்க சில வழிமுறைகளைப்  பின்பற்றலாம். வாட்ஸ்அப் லாக் செய்வது: வாட்ஸ் அப்பை லாக் செய்ய பிரத்யேக வசதி எதுவும் அதில் இல்லை. ஆனால் app lock போன்ற செயலிகளை பயன்படுத்தி, வாட்சப்பை வேறு யாரும் பயன்படுத்த முடியாதபடி லாக் செய்திடலாம்.  

இந்த ஆப் லாக் செயலி மூலம் SMS, Contacts, Gmail, Facebook, Gallery, Market, Settings, Calls மற்றும் நீங்கள் விரும்பும் எந்த ஒரு ஆப்பையும் "லாக்" செய்திடலாம். மற்றும் வாட்சப் லாக், செக்யூர் லாக், சாட் லாக் போன்ற லாக் அப்ளிகேஷன்களும் உண்டு. போலி தகவல் எச்சரிக்கை: வாட்சப்பில் நம்ப முடியாத வகையில் கவர்ச்சிகரமான தகவல்கள் வருவதுண்டு. 

அவற்றை கண்டிப்பாக நம்ப கூடாது. குறிப்பாக அரசியல் தலைவர்கள் பேசுவது போன்ற ஆடியோ, உதவி செய்ய வேண்டி மனதை உருக்கும் வகையில் அமையும் ஆடியோ / Video, படங்கள் (Photos), இலவச நன்கொடைகள் பற்றிய தகவல்கள். எதுவாக இருந்தாலும் பெரும்பாலான தகவல்கள் பொய்யானவையாகவே இருக்க கூடும். 

உண்மையான தகவல்கள் என நீங்கள் நம்பினால், அவற்றை உறுதி செய்த பிறகு மேற்கொண்டு தொடரலாம். ப்ரோபைல் பிக்சர் - கவனம். உங்கள் ப்ரோபைல் பிக்சரை சிலர் தவறாக பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம். உதாரணமாக கூகிள் சர்ச்சில் உங்களது ப்ரொபைல் பிக்சரைப்  பயன்படுத்தி உங்களைப் பற்றி விபரங்களை எடுக்க முடியும். 

புரைபைல் பிக்சர் தொடர்புகளில் இருப்பவர்கள் மட்டும் காணுமாறு அமைக்கலாம். போன் தொலைந்துபோனால் வாட்சப் செயலிழக்கும் வழி உங்களுடைய மொபைல் போன் தொலைந்து போனால், அதிலிருக்கும் வாட்சப்பைப் பிறர் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. அதில் உள்ள தகவல்களை எடுத்து பயன்படுத்தவும் முடியும். இதைத் தவிர்க்க, தொலைந்தபோன சிம்கார்டை லாக் செய்துவிடலாம். 

இந்த வசதியை வாட்சப் அளிக்கிறது. அதே எண்ணில் புதிய சிம் கார்டு வாங்கி, அதே புது வாட்ஸ் அப் கணக்கைத்  தொடங்கலாம். சொந்தத் தகவல்களைப் பகிர வேண்டாம், வாட்சப்பில் என்னதான் நண்பர்களாக இருந்தாலும், அதன் மூலம் பேங்க் அக்கவுண்ட், முகவரி, செல்போன், சுய விவரக்  குறிப்புகளைப் பகிராதீர்கள். 

தேவைப்பட்டால் நேரில் சென்று தகவல்களை அளிக்கலாம். வாட்சப் மூலம் உங்களுக்கு பரிசு விழுந்திருக்கிறது போன்ற தகவல்களை ஒருபோதும் நம்பி உங்களுடைய வங்கி கணக்கு விபரங்களை , இமெயில் முகவரிகளைக்  கொடுக்கக் கூடாது. வாட்சப் புகைப்படங்கள் போட்டோ ரோலில் சேர்வதைத் தடுக்க, வாட்ஸ் அப்பில் போட்டோக்களைப்  பகிரும்பொழுது அவைகள் போட்டோ ரோலில் சேகரிக்கப்படும். அதனால் அவைகள் திருடப்படும் வாய்ப்புகள் அதிகம். 

இதைத் தடுக்க, போன் செட்டிங் மெனுவில் பிரைவசியில் போட்டோ Deselect செய்ய வேண்டும். மேற்கூறிய வழிகளில் வாட்ஸப் மூலம் உங்களது தகவல்கள் திருடப்படாமல் பாதுகாக்க முடியும்

விழிப்புணர்வுக்காய்,

-Ln.இந்திராதேவி முருகேசன், சோலை.

Comments