காந்தி நினைவு நாளை முன்னிட்டு கோவையில் அமைதி புறாக்களை பறக்க விட்டு மஜக சார்பில் கொடியேற்றம்!

     -MMH

     மஜக பொதுச்செயலாளர் மு. தமிமுன்அன்சாரி கொடியேற்றி வைத்து வாழ்த்துரை!

கோவை மாநகர் மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சி மத்திய பகுதிக்குட்பட்ட செல்வபுரம் 77.78.வது அலுவலக திறப்பு விழா மற்றும் கொடியேற்று விழா கிளை செயலாளர் பயாஸ், அவர்கள் தலைமையில் எழுச்சியோடு நடைப்பெற்றது.

இதில் மாநில துணை செயலாளர் A.அப்துல்பஷீர், IKP மாநில செயலாளர் லேனா இஷாக், கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் கோவை நாசர், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், சிங்கை சுலைமான், முஸ்தபா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, அவர்கள் அலுவலகத்தை திறந்து வைத்து இரண்டு இடங்களில் கட்சியின் கொடியேற்றி அமைதிப் புறாவை பறக்க விட்டு நிர்வாகிகள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.

அவர் பேசியதாவது, "இன்று கொங்கு மண்டலமாம் கோவையில் நீண்ட நெடிய நாட்களுக்கு பிறகு கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்து நாம் அனைவரும் மீண்டும் சந்திக்கும் வாய்ப்புகளை இறைவன் நமக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளான். அதற்கு நாம் முதலில் இறைவனுக்கு நன்றி தெரிவிப்போம்.

கடந்த பிப்ரவரியில் ஒரு எழுச்சி மிக்க மாநாட்டை இந்த கொங்கு மண்டலத்தில் நாம் நடத்தியிருக்கிறோம். கொரோனா நெருக்கடியிலும் எல்லோரும் சோர்வடைந்த நிலையிலும்  நாம் நம்முடைய மக்கள் சேவைகளை தொடர்ந்து செயல் படுத்தி வந்தோம்,  மேலும் காவிரி விவகாரம், பேரரிவாளன் விடுதலை, வெளிநாடு வாழ் தமிழர்களை தாயகம் அழைத்து வருதல், போன்ற கோரிக்கைகளில் வலைதளம் மூலமும் ஆர்ப்பாட்டம் நடத்த முடியும் என மற்ற கட்சிகளுக்கு முன்மாதிரியாக விளங்கியது மனிதநேய ஜனநாயக கட்சி.

கோவையில் மனிதநேய ஜனநாயக கட்சி அபார வளர்ச்சி யடைந்திருக்கிறது அதற்கு உதாரணம் கடந்த செயற்குழுவில் 5 சான்றிதழ்களை கோவை மாவட்டம் பெற்றிருக்கிறது. இந்த அலுவலகத்தில் ஒரு நூலகத்தை ஏற்படுத்துங்கள் நமது அலுவலகங்கள் அறிவை வளர்த்துவதாக இருக்கவேண்டும்." என பேசினார்.

இந்நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், IKP மாவட்ட செயலாளர் ஹனீப், மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் பாதுஷா, இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் பைசல்,  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் EBR.இப்ராஹிம், ஹக்கீம், சேட், PMA.பைசல், கமால் பாஷா, தெற்கு பகுதி செயலாளர் காஜா உசேன், பொருளாளர் நவ்ஷாத்,  துணைச் செயலாளர அப்பாஸ்,  கிணத்துக்கடவு பகுதி துணைச் செயலாளர் அக்பரலி, மற்றும் மாவட்ட, நகர, பகுதி, கிளைக் கழக, நிர்வாகிகள், உறுப்பினர்கள்,  மற்றும் ஜமாத் நிர்வாகிகள், தோழமை கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை 78 வது வார்டு செயலாளர் ஜாகிர், 77வது வார்டு பொருளாளர் அலி, துணை செயலாளர்கள் பீர்முகம்மது, நெளபல், 78 வது வார்டு துணை செயலாளர் பாபு, மாணவர் இந்தியட செயலாளர் ஹாருண், இளைஞரணி செயலாளர் இஸ்மாயில், தொழிற்சங்க செயலாளர் யூசுப், மற்றும் சித்திக், மன்சூர், செமீர், ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப், தொண்டாமுத்தூர்.

Comments