பொங்கல் பரிசு கிடைக்க வில்லையா..? தமிழக அரசு புதிய அறிவிப்பு..!
நாள்தோறும் 200 பேர் வீதம் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இந்த தேதிகளில் பெறத் தவறியவர்கள் 13ஆம் தேதி பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, தலா 20 கிராம் முந்திரி திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு நீளக் கரும்பு ஆகியவை அடங்கும்.
இதற்கிடையில் ரேஷன் கடை ஊழியர்கள் தங்களின் சம்பள உயர்வு பிரச்சினையை முன்னிறுத்தி போர்க்கொடி உயர்த்தினர். இவர்களை சமாதானப்படுத்தும் நடவடிக்கையில் மாநில அரசு ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் பொங்கல் பரிசு வழங்க தேவையான நிதி, அந்தந்த மாவட்ட கூட்டுறவு வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.
இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு, டோக்கன் தொடர்பாக தகவல் மற்றும் புகார் ஏதேனும் இருந்தால் 044-2766240 என்ற மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் பொங்கலுக்கு முன் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற முடியாதவர்கள் ஜனவரி 19ஆம் தேதி பெற்றுக் கொள்ளலாம் என்று அமைச்சர் செல்லூர் ராஜு அறிவித்துள்ளார். ஜனவரி நாடு முதல் 13-ஆம் தேதி வரை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜனவரி 19ஆம் தேதி பெறலாம் என்றும் காலையில் 100 பேருக்கும் மதியம் 100 பேருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
-ஸ்டார் வெங்கட்.
Comments