புத்தாண்டை முன்னிட்டு, பொன்னமராவதியில் சிறப்பு வழிபாடுகள்!

-MMH

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியப் பகுதிகளான கொன்னையூர், திருக்களம்பூர், வேந்தன்பட்டி, மேலைச்சிவபுரி உள்ளிட்ட கோவில்களில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு  அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.  

இதில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தேரடி மலம்பட்டியில் உள்ள அருள்மிகு அருணவள்ளி சமேத ஆதிபூமிநாதர் வாஸ்து ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதேபோல் வேகுப்பட்டி ஆஞ்சநேயர் கோவில், கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில், பொன்னமராவதி நகர சிவன் கோவில், அழகிய நாச்சியம்மன் கோவில், பெருமாள் கோவில், மலையாண்டி கோவில் உள்ளிட்ட ஏராளமான கோவில்களில் புத்தாண்டையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடுகள் நடைபெற்றன.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-M.சதாம் உசேன்.

Comments