பொள்ளாச்சியில் தயார் நிலையில் உள்ள இலவச சைக்கிள்கள்..!!

     -MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு வழங்க அரசின் விலை இல்லா சைக்கிள்கள் தயார் நிலையில் உள்ளது.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் மாணவ-மாணவிகள் 2676 பேருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளதாகக் கல்வி அதிகாரி வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் பணி தொடங்கி உள்ளது. இதற்காகப் பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் சைக்கிள்களுக்கு உபகரணங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது.

தற்போது பணிகள் முடிந்து மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்கு சைக்கிள்கள் தயார் நிலையில் உள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி கிழக்கு.

Comments