ஞாபக மறதிக்கு காரணம் யார் தெரியுமா?? - அதை போக்குவது எப்படி என்று பார்க்கலாம்!!

     -MMH 

ஞாபக மறதிக்கு காரணம் "அல்சைமர்" எனப்படும் நோய்.

அல்சைமர் என்பது ஒரு நாள்பட்ட மூளையை பாதிக்கும் நோயாகும். இது மூளையில் சீரழிவை ஏற்படுத்துகிறது. இது ஒரு வகையான டிமென்ஷியா மற்றும் 65 வயதிற்கு மேற்பட்டவர்களை பாதிக்கக்கூடியது. அல்சைமர் நோய்க்கான முக்கிய காரணிகளுள் மரபணுக்கள், வயது மற்றும் குடும்ப வரலாறு போன்றவை அடங்கும். இந்த அல்சைமர் நோய் வரக்கூடாது என்றால், அறிவாற்றல் பயிற்சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகளை உண்பது, சமூக ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் புகைப்பழக்கத்தை கைவிடுவது போன்றவற்றை தவறாமல் மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் இவை மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளாகும்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன், சீரான ஊட்டச்சத்துள்ள உணவுகளை ஒருவர் உட்கொண்டு வந்தால், அல்சைமர் நோயின் தாக்கத்தைத் தடுக்கலாம்.

அல்சைமர் நோயானது எடுத்த எடுப்பிலேயே வந்துவிடாது. இதற்கான அறிகுறிகள் படிப்படியாகத் தான் வெளிவரத் தொடங்கும். அதன் பின் அது மெதுவாக மூளையை சிதைவடையச் செய்யும். இப்போது ஒருவருக்கு அல்சைமர் நோய் இருந்தால் வெளிப்படும் சில பொதுவான அறிகுறிகளைக் காண்போம்.

அல்சைமர் நோயின் அறிகுறிகள்:


* ஞாபக மறதி


* தனிமனித சுகாதாரத்தில் குறைவு


* பிரச்சனைகளைத் தீர்க்கும் திறன்களில் குறைவு


* வழக்கமான பணிகளைக் கூட செய்ய இயலாமை


* மனநிலை மற்றும் ஆளுமையில் மாற்றங்கள்


* எழுதுவது மற்றும் பேசுவதில் சிக்கல்கள்


அல்சைமர் நோய்க்கான சிறந்த உணவுகள்:

அல்சைமர் நோயை குணப்படுத்த எந்த சிகிச்சையும் இல்லை. இருப்பினும், இந்நோயின் ஆரம்ப கட்டங்களில் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் சில ஆரோக்கியமான மாற்றங்களை செய்வதன் மூலம் அல்சைமர் நோயின் முன்னேற்றத்தைக் குறைக்கலாம். அறிவாற்றல் வீழ்ச்சியின் செயல்முறையை மெதுவாக்குவதற்கும், அறிவாற்றல் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்குமான சிறந்த டயட் தான் MIND டயட். இது மத்திய தரைக்கடல் மற்றும் DASH டயட்டுகளின் கலப்பினமாகும்.

-ஸ்டார் வெங்கட்.

Comments