திருட வந்த இடத்தில் தின்பண்டங்களை தின்று விட்டு சாவகாசமாக சென்ற பசி... திருடர்கள்!!
சென்னை அருகே திருட வந்த இடத்தில் தின்பண்டங்களை தின்று விட்டு சென்ற திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர். தாம்பரத்தில் இருந்து முடிச்சூர் செல்லும் சாலையில் உள்ள கிரீன் பிரஷ் சூப்பர் மார்க்கெட்டை இன்று காலையில் ஊழியர்கள் திறந்த போது, அந்த கடையில் பணம், பொருட்கள் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், இரவில் கடையின் தகர கூரையை பிரித்து இறங்கிய கொள்ளையர்கள், கண்காணிப்பு கேமிரா இணைப்பை துண்டித்து விட்டு, பணம், பொருட்கள் என ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ளவற்றை திருடியது தெரியவந்தது.
மேலும் திருட வந்த திருடர்கள் கடையில் உள்ள தின்பண்டங்களை தின்றும், குளிர் பானங்களை குடித்தும் சாவகாசமாக செயல்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. தின்று, திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V.ருக்மாங்கதன் சென்னை.
Comments