நேதாஜி பிறந்தநாள் துணிச்சல் தினமாக கொண்டாடப்படும் மத்திய அரசு அறிவிப்பு!!

 

-MMH 

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125-வது பிறந்தநாள், வருகிற 23-ந் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அந்த நாளை துணிச்சல் தினமாக (பராக்கிரம் திவாஸ்) கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை மத்திய மந்திரி பிரகலாத் சிங் ஜோஷி அறிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:- 23-ந் தேதி கொல்கத்தாவில் நடக்கும் முதலாவது துணிச்சல் தின விழாவில், பிரதமர் மோடி பங்கேற்கிறார். தேசிய நூலக மைதானத்தில் நேதாஜி தொடர்பான கண்காட்சியை திறந்து வைக்கிறார். நேதாஜி அமைத்த இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் மோடி கவுரவிக்கிறார்.

நேதாஜியின் 125-வது பிறந்தநாளை ஓராண்டு முழுவதும் கொண்டாடுவதற்கான திட்டங்களை வகுக்க பிரதமர் தலைமையில் 85 பேர் கொண்ட உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-V.ருக்மாங்கதன் சென்னை.


Comments