கோவை எலும்பு முறிவு சிறப்பு சிகிச்சை நிபுணர் சாதனை!!
இரு கால்களும் வளைந்த நிலையில் பிறந்த குழந்தைக்கு பாரம்பரிய மருத்துவ முறையுடன் சிறிய அறுவை சிகிச்சையும் செய்து கால்களை நேராக்கி கோவையை சேர்ந்த எலும்பு முறிவு சிறப்பு சிகிச்சை நிபுணர் சாதனை படைத்துள்ளார்.
தற்போது வளர்ந்து வரும் நவீன மருத்துவ துறையில் குழந்தைகள் கருவறையில் இருக்கும் போதே ஸ்கேன் செய்து பார்க்கும் குழந்தைக்கு ஏதாவது குறைகள் இருந்தாலும் தெரிய வருவதால் ஒரு சில தாய்மார்கள் சிசுவை கருக்கலைப்பு செய்யும் உயிருக்கு ஆபத்தான செயல்களை செய்கின்றனர். இந்நிலையில் தற்போதையை நவீன மருத்துவ முறையில் குழந்தைகள் கை,கால்கள் திரும்பி இருப்பது போன்ற ஊனங்களுடன் பிறக்கும் குழந்தைகளை ஒரு சில வாரங்களில் குணப்படுத்த இயலும் கோவை பிரீத்தி மருத்துவமனை தலைமை மருத்துவரும் எலும்பு மூட்டு சிகிச்சை சிறப்பு நிபுணருமான டாக்டர் தண்டபாணி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கோவை வால்பாறையை சேர்ந்த தம்பதிக்கு கால்கள் வளைந்த நிலையில் பிறந்த குழந்தைக்கு ஏழு வாரங்களில் சிறிய அறுவை சிகிச்சையுடன் கால்களை நேர் செய்து சாதனை படைத்துள்ளார்.இது குறித்து மருத்துவர் தண்டபாணி செய்தியாளர்களிடம் பேசுகையில், குழந்தைகள் கருவில் இருக்கும்போது ஸ்கேன் செய்து பார்க்கும் போது கைகளோ கால்களோ ஏதாவது ஊனத்துடன் இருந்தாலும் பெற்றோர்கள் பயப்படாமல் குழந்தை பெறும் பட்சத்தில் அதனை சரி செய்ய ஏராளமான நவீன மருத்துவ வசதிகள் தற்போது இருப்பதாகவும் எனவே கருக்கலைப்பு போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
-சீனி, போத்தனூர் .
Comments