சிங்கம்புணரி அருகே ஊரணி தூர்வார பூமி பூஜை! மாவட்ட சேர்மன் தலைமையில் நடைபெற்றது!

-MMH

 கட்டுக்குடிப்பட்டியில் மாவட்ட சேர்மன் நிதியிலிருந்து செட்டி ஊரணி தூர்வாருவதற்கு பூமி பூஜை, மாவட்ட சேர்மன் பொன்மணி.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகா, எஸ்.புதூர் ஒன்றியம், 

கட்டுக்குடிப்பட்டி ஶ்ரீ செல்வவினாயகர் மற்றும் ஶ்ரீ மஹா மாரியம்மன் கோவில் பின்புறம் அமைந்துள்ள செட்டி ஊரணியை தூர்வாருவதற்காக மாவட்ட சேர்மன் நிதியிலிருந்து ₹.14லட்சம் ஒதுக்கப்பட்டு நேற்று பூமி பூஜை நடைபெற்றது.

இதில் கட்டுக்குடிப்பட்டி ஊர் பொதுமக்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் அனைவரும் சிவகங்கை மாவட்ட 1வது வார்டு கவுன்சிலரும் மாவட்ட சேர்மனுமான பொன்மணி.பாஸ்கரனை வரவேற்றனர். மாவட்ட சேர்மனுக்கு பொன்னாடை  போர்த்தி கௌரவித்தனர். இந்த நிகழ்வில் அதிமுக ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் ஊராட்சி கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

-அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments