கோவையில் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி!!

 -MMH

கோவையில் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில், தென்னிந்திய  மாநிலங்களை சேர்ந்த பிரபல மாடல்கள் பங்கேற்று, ஒய்யார நடை போட்டு, மேடையில் வலம் வந்தது, பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் அனைத்து துறைகளிலும் மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.இந்நிலையில் ஆடை அலங்கார துறையில் இந்திய அளவில் சாதிக்க துடிக்கும், இளம் தொழில் முனைவோர்கள் N eight பேஷன் மீடியாவை நடத்தி வருகின்றனர். 

இதன் இயக்குனர்களான சண்முகம்,பாலசுப்ரமணியம், ஜிக்கு சாக்கோ,ஜிம்சி சூசன் சாக்கோ ஆகிய  நான்கு பேர் இணைந்து  சுற்றுச்சூழல் , இயற்கை பாதுகாப்பு போன்ற சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான தென்னிந்திய அளவிலான N Eight பேஷன் லீக் எனும் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி  கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. இதில், சென்னை, பெங்களூரு, கேரளா  உள்ளிட்ட தென்னிந்திய  நகரங்களில் இருந்து, பிரபல  ஆடை வடிவமைப்பாளர்கள்,  கலந்து கொண்டனர். 

மின்னொளியில் வண்ண வண்ண ஆடைகள் அணிந்து ஒய்யாரமாக நடை போட்டு வந்த போட்டியாளர்கள், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர். நிகழ்ச்சியில் பிரபல சின்னதிரை நடிகை ஆலியா மானசா மற்றும் நடிகர் ராஜீவ் பிள்ளை உட்பட  முக்கியஸ்தர்கள் நடுவர்களாக பங்கேற்று, சிறந்த ஆடைகளை வடிவமைத்த குழுவினருக்கு சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்கி கவுரவித்தனர்.

- சீனி,போத்தனூர்.

Comments