பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா (PMAY) திட்டம் மூலம் வீடு பெறுவது எப்படி?
பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா (PMAY) திட்டம் மூலம் வீடு பெறுவது எப்படி என்று விளக்குகிறது இந்தப்பதிவு.
யாரெல்லாம் பெறலாம்?
12 லட்சத்துக்கும் குறைவாக ஆண்டு ஊதியம் பெறுபவர்கள், 9 லட்சம் வரை வீடு கட்டுவதற்கான கடன் உதவியைப் பெறலாம். மேலும், 12 லட்சம் முதல் 18 லட்சம் வரை ஊதியம் பெறுவோர், 12 லட்சம் வரை வீடு கட்டுவதற்கான கடன் உதவியைப் பெறலாம்.
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் சேர்ந்து வீடு பெற, முக்கியத் தகுதியாக குடும்ப உறுப்பினர்கள் யாரும் சொந்த வீடு வைத்திருத்தல் கூடாது. மேலும், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய (EWS) மக்களில் 3 லட்சத்திற்கும் குறைவாக ஆண்டு ஊதியம் பெறுபவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான தக்க சான்றிதழ்களைச் சமர்ப்பித்தல் அவசியம்.
குடும்பத்தில் பெண் உறுப்பினர்களுக்கு இந்தத் திட்டம் முன்னுரிமை அளிக்கிறது. நலிந்த பிரிவினர் (EWS) மற்றும் குறைந்த வருவாய் ஈட்டுவோர் (LIG) ஆகியோருக்கு 6.5% மானியம் வழங்கப்படும் என்பது இத்திட்டத்தின் சிறப்பம்சம். ஆரம்பத்திலேயே இந்த மானியத்தொகை உங்கள் வீட்டுக்கடன் கணக்கில் வழங்கப்படுவதால், உங்கள் மாதத்தவணை (EMI) வெகுவாகக்குறைகிறது.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
மேற்சொன்ன தகுதிகள் உங்களுக்கு இருக்கும்பட்சத்தில், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் நீங்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க pmaymis.gov.in என்ற இணையதளத்தில் லாகின் செய்ய வேண்டும். பின்னர், சிட்டிசன் அசெஸ்மென்டை (Citizen Assessment) க்ளிக் செய்து, குடிசை வாழ் மக்களாக இருந்தால் குடிசைவாசிகள் அல்லது இதர மூன்றாம் கூறின் பயனாளர்கள் (benefits under other 3 components) என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
பின்னர், ஆதார் அடையாள அட்டையின் தகவல்களை அளிக்க வேண்டும். நீங்கள் அளித்த தகவல்கள் உண்மையானதாக இருந்தால், அடுத்த பக்கத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும்.
அந்தப் பக்கத்தில் உங்களுடைய பெயர், ஊதியம், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, தற்போது வசிக்கும் வீட்டின் எண், குடும்பத் தலைவரின் பெயர் ஆகிய இதர விவரங்களையும் பூர்த்திசெய்ய வேண்டும். எல்லா தகவல்களையும் அளித்த பின்னர், வலைதளத்தின் கடைசி பக்கத்திற்குச் சென்று, 'கேப்சாவை' (Captcha) சரியாகக் குறிப்பிட வேண்டும். அடுத்ததாக,
உங்களிடம் வீடு கட்டுவதற்கான சொந்தமாக இடம் இருந்தால் போதும். உங்களுடன் இணைந்து அரசு அளிக்கும் சலுகைகளைப் பயன்படுத்தியும் வீட்டைக் கட்டிவிடலாம்.
பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா (PMAY) திட்டம் மூலம் SBI, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, கர்நாடகா வங்கி, icici, போன்ற வங்கிகளும் வீட்டுக் கடன் அளிக்கின்றனர். எனவே உங்களது அருகில் உள்ள ஏதேனும் வங்கி கிளைகளுக்கு சென்று விவரங்களைக் கேட்டும் விண்ணப்பிக்கலாம்.
-சுரேந்தர்.

Comments