மே 3ம் தேதி முதல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு; தமிழக அரசு அறிவிப்பு.!!

    -MMH

     தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 8 லட்சம் மாணவ மாணவிகள் 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. தொற்று பரவல் குறைந்தையடுத்து கடந்த ஜனவரி 19 ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 

பொதுத்தேர்வு நடைபெறும் தேதி எப்போது வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில், தமிழக அரசு பொதுதேர்வுக்கான கால அட்டவணையை இன்று வெளியிட்டுள்ளது.  இதன்படி, வரும் மே மாதம் 3 ஆம் தேதி  துவங்கும் பொதுத்தேர்வு 21 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

மே 3- மொழித்தாள், 

மே 5- ஆங்கிலம்

மே 7: கணிணி அறிவியல், உயிரி அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல் தேர்வுகள்

மே 11- இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம் 

மே 17- கணிதம், விலங்கியல் 

மே19- உயிரியியல் வரலாறு 

மே 21- வேதியியல், கணக்குப்பதிவியல் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெறும்

காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.  தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 8 லட்சம் மாணவ மாணவிகள் 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V.ருக்மாங்கதன்,சென்னை.

Comments