காரின் வெளியே வழக்கறிஞர் ஸ்டிக்கர்! உள்ளே கஞ்சா கடத்தல்! 3 பெண்கள் உட்பட 5 பேர் கைது!
சொகுசு காரில் வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டி கஞ்சா கடத்திய 3 பெண்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை வெண்ணாற்றங்கரை பகுதியில் இருசக்கர வாகனம் மற்றும் சொகுசு காரில் வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக தஞ்சை மேற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனை அடுத்து அந்தப் பகுதிக்கு தஞ்சை வட்டாட்சியர் மற்றும் தஞ்சை மேற்கு காவல்துறையினர் விரைந்து சென்ற போது வழக்கறிஞர்கள் ஸ்டிக்கர் ஒட்டிய ஒரு சொகுசு காரில், 22 கிலோ கஞ்சா வைத்து விற்பனை செய்ததும் அதற்கு துணையாக இரு சக்கர வாகனத்தில் சிலர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது,
இதையடுத்து உடனடியாக காவல்துறையினர் அவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது கார் மற்றும் இருசக்கர வாகனத்திலிருந்து தப்பிக்க முயன்ற தஞ்சைப் பகுதியைச் சேர்ந்த ஜெயபாண்டி அம்மாபேட்டையைச் சேர்ந்த பாண்டியம்மாள், கும்பகோணம் பாலக்கரையைச் சேர்ந்த சங்கர்கணேஷ், மாத்தூரைச் சேர்ந்த ஹரிப்பாண்டி உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தப்பி ஓடிய குமார் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
-ராயல் ஹமீது.
Comments