குத்துசன்டையில்4 தங்கபதக்கங்களை வென்ற கோவை வீரர்கள்!!

     -MMH

     சென்னையில் நடந்த 7வது மாநில அளவிலான முவய்தாய் போட்டியில் கோவை வீரர்கள் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

7வது மாநில அளவிலான 'முவய்தாய்' எனப்படும் குத்துச்சண்டை போட்டி சென்னையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு, தங்களின் திறமையை வெளிப்படுத்தினர். இதில் கோவையின் சார்பில் பயிற்சியாளர் 'பெரோஸ்' தலைமையில் 9 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில் 2 வீரர்கள் ப்ரோ ஃபைட்டிலும், 7 வீரர்கள் அமெச்சூர் போட்டியிலும் கலந்து கொண்டனர். இதில், அவர்கள் 4 தங்கம், 5 வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

பதக்கம் பெற்ற வீரர்களின் விபரம்:-

முஹம்மது சிஹாத் (10 வயது) தங்கம்

நஃபில் (9 வயது) தங்கம்

புவனேஸ் (15) தங்கம்

தீபக் (18) தங்கம்

நிகால் ராஹித், வெள்ளி

மிதிலேஸ் (18) வெள்ளி

பரத் விக்னேஷ் (19) வெள்ளி

ஆஷிக் ரியாஸ் (18) வெள்ளி

பவன் பண்டித் (18) வெள்ளி

மாநில அளவிலான போட்டியில் பதக்கங்களை வென்று கோவை திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப்,தொண்டாமுத்தூர்.

Comments