அரளிப்பாறை மஞ்சுவிரட்டில் 4 பேர் பலி!

 

-MMH

     சிங்கம்புணரி அருகே அரளிப்பாறையில் நேற்று நடந்த மஞ்சுவிரட்டில் 86 பேர் காயமடைந்தனர். அதில் 8 பேர் படுகாயமடைந்தனர். திருப்பத்தூர் புதூரைச் சேர்ந்த லட்சுமணன் மகன்  சேது (32), ஆத்தங்குடியைச் சேர்ந்த முத்து மகன் அஜித்குமார் (26), நாமனூரைச் சேர்ந்த பரமசிவம் மகன் மருதுபாண்டி (40), மேலவண்ணாரிருப்பைச் சேர்ந்த வெள்ளிபூசாரி மகன் மகேஷ் (22) இவர்கள் 4 பேரும் மாடு முட்டியதில் இறந்தனர்.

மேலும் குமாரபட்டி முருகன், தென்கரையைச் சேர்ந்த சாத்விக் உட்பட 86பேர்  காயமடைந்தனர். லேசான காயம் அடைந்தவர்களுக்கு  பிரான்மலை வட்டார மருத்துவ அலுவலர் நபிஷாபானு தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

மஞ்சுவிரட்டை அரளிப்பாறை மலைக் குன்றின் மீது பாதுகாப்பாக அமர்ந்து 50,000க்கும் மேலான பெண்கள், சிறுவர்கள்  கண்டு ரசித்தனர்.

-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments