பிரிந்த மனைவியை தேடிப் பிடித்து கொலை செய்த சைக்கோ கணவன்! நடத்தையில் சந்தேகம்!!

      -MMH

     செங்கல்பட்டு மாவட்டம் தச்சூர் பகுதியை சேர்ந்த எட்வர்ட் லாரன்ஸ் (50 ) அப்பகுதியில் தச்சு தொழில் செய்து வருகிறார். அவருடைய மனைவி சரோ வெனிசியா( 41) இவர்களுக்கு திருமணமாகி 25 வருடங்கள் ஆன நிலையில் காயத்தரிலினா(21) காவியா (18) ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.

செங்கல்பட்டு அருகில் குடும்பத்துடன் வசித்து வந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இருமாதங்களுக்கு முன்பு பிரிந்தனர்.

இதில் மாதவரம் பால்பண்ணை அருகில் உள்ள ஏம்எம்டிஏ முதல் தெருவில் வாடகை வீட்டில் சரோ வெனிசியா குடி பெயர்ந்தார். இவர் அருகிலுள்ள பியூட்டி பார்லரில் வேலை செய்து வந்தார்.

எட்வர்ட் லாரன்ஸ் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவ்வப்போது சண்டையிட்டிருக்கிறார். எனவே, சரோ வெனிசியா, கணவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்த நிலையில் மனைவியின் இருப்பிடம் தெரிந்து வீட்டிற்கு எட்வர்ட் லாரன்ஸ் வந்திருக்கிறார். அப்போது துணிமணிகள் வாங்க இரு மகள்களும் கடைக்கு சென்றிருந்தனர்.

வீட்டிற்கு வந்த எட்வர்ட் லாரன்ஸ் மனைவியுடன் வாய்தகராறில் ஈடுபட்டார் . மேலும் ஆத்திரமடைந்த எட்வர்டு லாரன்ஸ் திடீரென சமையல் அறையில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியால் மனைவி சரோ வெனிஸை வயிறு மார்பு கழுத்து ஆகிய பகுதிகளில் சரமாரியாக குத்தியதில் இரத்தம் பீறிட்டு, மனைவி பயங்கர வலியால் அலறித்துடித்தார்.

பயங்கர இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவரை காப்பாற்ற அருகிலுள்ளோர் மருத்துவ மனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி  அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து மாதவரம் பால்பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

இச்சம்பவத்திற்கு காரணமான தலைமறைவான எட்வர்ட் லாரன்ஸை பிடிக்க மாதவரம் பால்பண்ணை சிறப்பு படையினர் பாண்டிச்சேரி சென்றனர். அங்கு அவரது உறவினர் வீட்டில் பதுங்கியிருந்தவரை பிடித்து, கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தாயை பறிகொடுத்த இரு மகள்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கிய தந்தையை தண்டிக்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் தெரிவித்தனர். குற்றம் நடந்து முடிந்த 20 மணிநேரத்தில் தலைமறைவான குற்றவாளியை பிடித்த சிறப்பு படையினரை போலீஸ் உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-பாரூக்.

Comments