குடும்ப ஓய்வூதியதற்கான உச்சவரம்பு அதிகரிப்பு!!

    -MMH
     குடும்ப ஓய்வூதியத்திற்கான உச்சவரம்பு மாதத்திற்கு 45 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.உயிரிழந்த பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதோடு, போதுமான நிதி பாதுகாப்பை அவர்களுக்கு வழங்கும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்தர சிங் தெரிவித்துள்ளார்.பெற்றோர்களின் இறப்பிற்கு பிறகு இரு குடும்ப ஓய்வூதியங்களை பெற வேண்டியிருப்பின், அதற்காக அனுமதிக்கப்பட்டுள்ள உச்சவரம்பு குறித்த விளக்கத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

-அருண்குமார், கோவை மேற்கு.

Comments