இந்திய மருத்துவ சங்கத்தின் கண்டனங்களுக்கு உள்ளான மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்!

 

-MMH

     பல்வேறு நாடுகள்  தாங்கள் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தின் முழுசோதனை முடிவுகளையும் இன்னும் முழுமையாக அறியாத நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளை ஒரளவு பயன் படுத்திக்கொண்டிருக்கும் இவ்வேளையில் , சங்கபரிவார கார்ப்ரேட் சாமியார் பாபா ராம்தேவ் தனது கம்பெனி பதஞ்சலியின் தயாரிப்பான "திவ்ய கரோனில்" என்ற மருந்தினை கொரோனாவிற்கான மருத்துவ தீர்வாக "உலகசுகாதார மையம்" சான்றளித்துள்ளதாக கூறி  கடந்த வெள்ளியன்று  உலக சுகாதார மையத்தின் தலைமை பொறுப்பிலுள்ளவரும் - மத்திய சுகாதார அமைச்சருமான ஹர்ஷ் வர்தன் மற்றும் நிதின் கட்கரி பங்குபெற வெளியிட்டுள்ளர்.

இதுகுறித்து டிவிட்டரின் வாயிலாக மறுப்புதெரிவித்துள்ள  WHO ( உலக சுகாதார மையம்)  தாங்கள் எந்த பாரம்பரிய மருத்துவ மருந்துக்கும் கோவிட்-19ஐ குணப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக சான்றளித்திடவில்லை என மறுதளித்துள்ளது. முன்னதாக ராம்தேவ் தன்னுடைய மருந்தானது உலக சான்று பெற்றுள்ளதாகவும் , இதனால்  158 நாடுகளுக்கு ஏற்றுமதிக்கு உகநத்தாகனது என விளம்பரபடுத்திவந்தார்.

இந்நிகழ்வை குறித்து தங்களின் கண்டனங்களை மத்திய அமைச்சருக்கு தெரிவித்துள்ள அகில இந்திய மருத்துவ சங்கத்தினர், எந்த வித அடிப்படை ஆதாரமும் இல்லாத மருந்தினை கொரோனா தடுப்புக்காக பயன்படுத்த முடியும் என்றும் இதனை WHOவே அங்கரித்துள்ளனர் என்று   மத்திய அரசின் சார்பாக உள்ள அமைச்சரே கூறுதல் , 

கொரோனா தடுப்பூசிக்காக  35000 கோடிகளை செலவு செய்துவரும் மத்திய அரசை கேலிசெய்வது போன்றாகாதா? , ஆதாரமற்றவை மருந்தெனும் பெயரில் சட்டபூர்வமானதாக உருவாக்குவது ஏற்புடையதல்லவே என்றும் தங்களின் கன்டங்களை தெரிவித்துள்ளனர்.

-நவாஸ்.

Comments