போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்!!

     -MMH

அண்மைச் செய்தி:

14 ஆவது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட

9 கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தமிழகம் முழுவதும் மூன்றாவது நாளாக தொடர்ந்து இன்றும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுப்போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் மூன்றாவது நாளாக தொடர்ந்து அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தொழிலாளர் நல ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது.

இன்று மதியம் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் லட்சுமி காந்தன் தலைமையில் தொடங்கி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஊதிய ஒப்பந்த பேச்சுவாரத்தை தொடர வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டதால், உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-பாரூக்.

Comments