மதக்கலவரத்தை தூண்ட முயற்சித்த கல்யாணராமன், குண்டர் சட்டத்தில் கைது!

-MMH

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை பேச்சு! கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! மேட்டுப்பாளையத்தில் நடந்த பாஜக ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றிய அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியிருந்தார். இது சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சைக்குள்ளானது. மேலும் இஸ்லாமிய மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களிலும் பலரும் கல்யாணராமனை கண்டித்தனர். அன்று இரவே அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து, பாஜக பிரமுகர் கல்யாண ராமன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதனிடைய, குடியரசு சட்டம் தொடர்பாக நாடு முழுவதும் பெரும் விவாதம் நடைபெற்று வந்த போது, பிற மதத்தினருக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட வழக்கில் கோவை ரத்தினபுரி போலீசார் நேற்று  அவரை கைது செய்தனர். 

இந்த நிலையில், மதக்கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாக பாஜக பிரமுகர் கல்யாண ராமன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்ததையடுத்து மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-பாரூக்.

Comments