பொள்ளாச்சி தேர்நிலையம் சாலை பணிகள் தீவிரம்..!!

     -MMH

     கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைக்க, சாலை விரிவாக்க பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பொள்ளாச்சி பாலக்காடு சாலை பல்லடம் சாலை தேர்நிலையம் பகுதியில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது மரப்பேட்டை தேர்நிலையம் அருகில் தார் சாலை இடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

நெடுஞ்ச்சாலை துறை பணியாளர்கள் தொடர்ந்து சாலையின் நடுவில் தடுப்பு காங்கிரீட்சுவர் அமைக்க கம்பிகள் காட்டும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் .

பொள்ளாச்சியில் இருந்து உடுமலை, பழனி, திண்டுக்கல், மதுரை, சென்னை பிரதான சாலை என்பதால் வாகன போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. போக்குவரத்து காவல்துறை காவலர்கள்  வாகன நெரிசலை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி கிழக்கு.

Comments